மத்தியவங்கியின் அர்ஜுன் மகேந்திரனை சர்வதேச பொலிசார் மூலம் கைது செய்ய முடியாது!
20 Mar,2018
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனை சர்வதேச பொலிசார் ஊடாக கைது செய்ய முடியாது என்று கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதிபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார். “அர்ஜுன் மகேந்திரன் ஒரு சிங்கப்பூர் பிரஜை. சிங்கப்பூர் நாடு இதுவரை சர்வதேச பொலிஸ் ஒழுங்குகள் தொடர்பான ஆவணத்தில் இதுவரை கைச்சாத்திடவில்லை.

அதன் காரணமாக அர்ஜுன் மகேந்திரனை சர்வதேச பொலிசாரின் சிவப்பு அறிக்கை மூலமாக சிங்கப்பூரில் வைத்துக் கைது செய்து இலங்கைக்கு கொண்டுவருவது முடியாத காரியம்.பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்குள்ள தனிப்பட்ட நட்பைப் பயன்படுத்தி அவரை இலங்கைக்கு வரவழைத்தாலே தவிர வேறு வகையில் அவரை இலங்கைக்கு அழைத்து வர முடியாது என்றும் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்