26 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்
14 Mar,2018
அவுஸ்திரேலியா மற்றும் சுவிற்சர்லாந்தில் சட்டவிரோதமாக குடியிருந்த 26 இலங்கையர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து 15 இலங்கையர்கள் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை 6.20 மணியளவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேவேளை, சுவிற்சர்லாந்தில் இருந்து 11 இலங்கையர்கள் காலை 9 மணியளவில் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்களுள் சிங்கள மற்றும் தமிழர்கள் இருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நாடுகடத்தப்பட்டுள்ள இலங்கையர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அவர்களது அறிக்கையை பதிவு செய்த பின்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.