இலங்கையில், மாகாண சபை உறுப்பினர் மீது துப்பாகிப் சூடு..
09 Mar,2018
!
மேல்மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா இன்று வியாழக்கிழமை இரவு 9.30 அளவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் கொழும்பு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பின் புநகர் பகுதியான ரத்மலானையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக கூறிய பொலிஸார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அமல் சில்வா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.
அனுமதியின்றி கைத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர், பின்னர் பினையில் விடுதலை செய்ய்ப்பட்டிருந்தார்.
இதேவேளை கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்ல்ப்பட்டும் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு மணிநேர இடைவெளியில் ரத்மலானையில் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மீது துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.