ஒவ்வொரு இலங்கையர் தலையிலும் இவ்வளவு கடன் சுமையா?
24 Feb,2018
இலங்கையர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ள கடன்சுமை ஒரே ஆண்டில் 45 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு இறுதியிலேயே இலங்கையர்களின் தலா கடன்சுமை, 417,913 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இது, 2015ஆம் ஆண்டில், 373,462 ரூபாவாக இருந்தது. ஒரே ஆண்டில், இந்த தலா கடன்சுமை, 44,451 ரூபாவினால் (12 வீதம்) அதிகரித்துள்ளது.
2005ஆம் ஆண்டில், இலங்கையர்கள் ஒவ்வொருவரினதும் தலா கடன் சுமை 108,908 ரூபாவாகவே இருந்தது.
10 ஆண்டுகளில் அது மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.