இலங்கையில் பெய்யவுள்ள செயற்கை மழை!
20 Feb,2018
இலங்கையில் செயற்கை மழையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்காக இலங்கை வந்துள்ள தாய்லாந்து தொழில்நுட்ப நிபுணர் குழு இன்று தமது பணிகளை ஆரம்பிக்க உள்ளது.
இவர்கள் இன்று முதல் நீர்த்தேக்கங்களை அண்மித்த சில பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளதாக மின்சக்தி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 59 வீதம் வரை குறைவடைந்துள்ளது.
இதனால் நீர்மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறுவதாக மின்சக்தி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.