2864 வெடிபொருட்கள் பதினைந்து மாத காலப்பகுதிக்குள் அகற்றப்பட்டுள்ளதுஸ
20 Feb,2018
இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான வெடிபொருட்கள் பதினைந்து மாத காலப்பகுதிக்குள் அகற்றப்பட்டுள்ளதாக SHARP நிறுவன முகாமையாளர் தெரிவிப்பு.
கிளிநொச்சியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ளுர்யுசுP மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்;தால் பதினைந்து மாத காலப்பகுதியில் இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான வெடிபொருட்கள் அகற்ப்பட்டுள்ளது எனது நிறுவன முகாமையாளார் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
அண்மையில் SHARP நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்கும் ஜப்பானிய நாட்டின் இலங்கைப் பிரதிநிதி செல்வி நிறோசா வெல்கம அவர்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு SHARP நிறுவனத்தின் பளை அவலுவலம் மற்றும் கண்ணி வெடி அகற்றும் பகுதிகளை பார்வையிட்டார். இதன் போது நிறுவனத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முடிவடைந்து வேலைத்திட்டங்கள் தொடர் தெளிவுபடுத்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடும் போது இந்த நிறுவனமானது கடந்த பதினைந்து மாத காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து இருநூற்று அறுபது சதுரமீற்றர் பரப்பளவில் (309,260 Sqm ) இருந்து இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு(2864) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது தொடர்ந்தும் முகாமாலை கிளாலிப்பகுதிகளில் கண்ணி வெடி அகற்றும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம் என்றும் குறிப்பட்டார்.
ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஜப்பான் நாட்டு மக்களிடமிருந்து பெறப்பட்ட 9.8 பில்லியன் பணம் நிதியுதவியுடாக குறித்த பகுதிகளில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் மேற் கொள்ளபட்டுவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.