பிரதமராகிறார் கரு ஜயசூரிய: புதிய அமைச்சரவை தயார்?
17 Feb,2018
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தை தணிக்கும் வகையில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய புதிய அமைச்சரவை உருவாக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான உத்தியோகபூர்வ செய்திகள் ஒரு சில தினங்களுக்குள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசின் அடிப்படையில் ஜனாதிபதியினால் திட்டமிடப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில், பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த கரு ஜயசூரிய நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் புதிய அமைச்சரவையில் 24 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் பின்வருவோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1. பிரதமர் மற்றும் ஆவணப்படுத்தல் அமைச்சர் – கரு ஜயசூரிய2. நீதியமைச்சர் – விஜயதாச ராஜபக்ஷ3. திட்டமிடல் அமுலாக்கல் – சரத் அமுனுகம4. நிதி மற்றும் திட்டமிடல் – எரான் விக்கிரமரட்ண5. வெளிவிவகாரம் – வசந்த சேனாநயக்க6. சுகாதாரம் – நிமல் ஸ்ரீபால டி சில்வா7. கல்வி, உயர் கல்வி – புத்திக பத்திரன8. வர்த்தக, வாணிபம் – ஹர்ச டி சில்வா9. கைத்தொழில், விஞ்ஞான தொழில்நுட்பம் – சுசில் பிரேமஜயந்த10. விவசாயம், உணவு உற்பத்தி – மஹிந்த அமரவீர11. மாகாணம் மற்றும் பொதுநிர்வாக உள்ளூராட்சி – ஜோன் செனவிரட்ண12. சமூக நலன்புரி மற்றும் சுற்றுச்சுழல் – தலதா அத்துக்கோரல1.3 வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி – சஜித் பிரேமாதாஸ14. சுற்றுலாத்துறை மற்றும் ஊடகம் – கயந்த கருணாதிலக்க15. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை விமான போக்குவரத்து – மஹிந்த சமரசிங்க16. பெற்றோலிய எரிபொருள் துறை – எஸ்.பி திசாநாயக்க17. விளையாட்டு மற்றும் கலாச்சாரம் – நவீன் திசாநயக்க18. சமய விவகாரம் – சம்பிக்க ரணவக்க19. மீள்நல்லிணகம் மற்றும் மீள் குடியேற்றம் – ஆறுமுகன் தொண்டமான்20. தபால் தொலைத்தொடர்பு – ரவூப் ஹக்கீம்21. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் – அர்ஜூன ரணதுங்க22. தொழில் வேலைவாய்ப்பு – ரிஷாத் பதியுதீன்23. மீன்பிடி அபிவிருத்தி – டக்ளஸ் தேவானந்தா
24. காணி மற்றும் நீர்விநியோகம் – சந்திம வீரக்கொடி