வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாபம்!
17 Feb,2018
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர் ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
அவ்வாறு நாடு கடத்தப்பட்ட இலங்கையர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மாத்தளை, களுதேவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர் கடந்த 2012ஆம் ஆண்டு 44 பேருடன் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று பிற்பகல் மினுவாங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.