ஐ.தே.க தனியரசாங்கம் – தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு
13 Feb,2018
ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் விஷேட சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் நேற்று இரவு விஷேட சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.ஜனாதிபதி செயலகத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மாலிக் சமரவிக்ரம, செயலாளர் நாயகம் கபீர் ஹசிம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் எதிர்காலம் குறித்து இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஆணையின்படி தனக்கு தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி உள்ளதாகவும், அதற்கு முன்னர் தீர்மானம் ஒன்றை எடுக்குமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூறியுள்ளார்.
இருப்பினும், குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட எந்த முடிவையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும் இந்த சந்திப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களுக்கு தௌிவுபடுத்தியுள்ளதாகவும், அனைத்து அமைச்சர்களையும் இன்று கொழும்பில் இருக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக்கட்சி தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் மட்டத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.ஐக்கிய தேசியக் கட்சி தனியரசாங்கம் அமைக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரதரவு வழங்குமெனவ தகவல்கள் வெளியாகி உள்ளன.
உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர்கள் கூட்டம், பாராளுமன்றக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் ஐக்கிய தேசியக்கட்சி தனியாட்சி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.