யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
09 Feb,2018
யாழ்ப்பாணத்தில் சுற்றுலா சென்ற பெண்களை மிரட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
அவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காரில் சென்றவர்களை வழிமறித்து துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி தங்கநகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த கொள்ளைச் சம்பத்தில் ஈடுபட்ட நபரை காரில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட்ட ஆறு பேர் சாவகச்சேரி நீதிமன்றில் அடையாளம் காட்டினர்.
கடந்த 18ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த காரை எழுதுமட்டுவாழ் பகுதியில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் வழி மறித்து அவர்களிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
கொள்ளையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் இரவு தபால் ரயிலில் தப்பி செல்ல மிருசுவில் ரயில் நிலையத்தில் நின்ற வேளையில் கைது செய்து மறுநாள் பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர்.
வழக்கை விசாரித்த பதில் நீதவான் குறித்த நபரை விளக்கமறியலில் வைத்து அடையாள அணிவகுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.