ஐரோப்பிய ஒன்றியத்தினால் கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்ட இலங்கை
08 Feb,2018
பணச்சலவை மற்றும் தீவிரவாத நிதியளிப்பு அதிகம் இடம்பெறும் நாடுகளைக் கொண்ட கறுப்பு பட்டியலில் இலங்கை, டீயுனீசியா மற்றும் ட்ரினேட் என் டொபேகோ ஆகிய நாடுகளை உள்ளடக்குவதற்கான யோசனை கடந்த 2ம் திகதி முன்வைக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றது.
இதில் 375 உறுப்பினர்கள் குறித்த உள்ளடக்கத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், 283 உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.
இலங்கை உள்ளிட்ட குறித்த நாடுகளில் பணச்சலவை போன்ற நிதிமுறைக்கேடுகள் அதிகம் இடம்பெறும் நிலையிலேயே இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.