இலங்கை இராணுவம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்துக்கு பரிந்துரை
27 Jan,2018
இலங்கை இராணுவத்தை மீள்புனரமைப்பு செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட குழுவிலிருந்து இலங்கை அரசாங்கத்துக்கு முதல் தடவையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பரிந்துரைகளுக்கு மூலகாரணம், தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அரச சார்பற்ற அமைப்புக்களும் இலங்கைக்கு அண்மையில் வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழுவிடம் முன்வைத்த முறைப்பாடுகள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த முறைப்பாடுகளில் பாரிய குற்றச்சாட்டுக்கள் வட மாகாண முதலமைச்சரினால் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய சங்கத்தின் உயர் மட்ட குழுவினால் 26 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர பல பரிந்துரைகளும் அதில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஏ-9 வீதியில் இராணுவத்தினரால் நடாத்தப்பட்டு வரும் கடைத்தொகுதிகள் மற்றும் வடக்கிலுள்ள இராணுவ ஹோட்டல்கள் என்பனவும் தவறானது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.