பொலிஸ் தேசிய கீதத்தில் ஏற்பட்ட மாற்றம்: ! வடக்கு இளைஞனால் தமிழில் பொலிஸ் கீதம்!
21 Jan,2018
150 வருடங்களுக்கு பின்னர் இலங்கை பொலிஸ் கீதம் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இதனை வடமாகாணத்தின் வவுனியா இளைஞன் பாடியுள்ளார்.
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்தில் நேற்று பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இதனை வெளியிட்டு வைத்தார்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் 150 வருடங்களுக்கு பின்னர் பொலிஸ் கீதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள தேசிய கீதம், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தமிழ் பொலிஸ் கீதத்தை வவுனியாவைச் சேர்ந்த பாடகர் கந்தப்பு ஜயந்தன் பாடியுள்ளார். பாடலுக்கு வரிகளை வீரசிங்கம் பிரதீபன் எழுதியுள்ளார்.