கதிர்காமத்தில் பதற்ற நிலை- 63 பேர் கைது
21 Jan,2018
.
கதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை கண்டித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு பிரிவினர் தடியடி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், குழப்ப நிலைமையை ஏற்படுத்த முனைந்த 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதில் 15 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.