இலங்கை – இந்திய குறைந்த கட்டண விமான சேவை இன்று ஆரம்பம்
20 Jan,2018
இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையிலான விசேட விமான சேவையொன்று இன்று (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன் முதலாவது விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கி இன்று காலை 8.00 மணிக்கு வந்தடைந்துள்ளது. இந்த விமானம் கட்டுநாயக்கவில் வரவேற்கப்படும் காட்சியையே இப்படத்தில் காண்கின்றோம்.
“இன்டிகோ” என அழைக்கப்படும் இந்த விமான சேவை ஒரு நாளைக்கு மூன்று முறை இரு நாடுகளுக்கிடையில் போக்குவரத்தை வழங்கவுள்ளது. இந்தியாவின் சென்னை, பெங்களுர் ஆகிய நகர்கலிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க நோக்கி இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது.
மிகவும் கட்டணம் குறைந்த விமான சேவையாக இது கருதப்படுவதாகவும் கூறப்படுகின்றது.