அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மைத்திரி! பலர் அதிர்ச்சியில்
14 Jan,2018
மதுபானம் தொடர்பில் கடந்த வாரம் வெளியான வர்த்தமானியை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அகலவத்தையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
“மதுபான நிலையங்கள் திறந்திருக்கும் நேரங்கள் நீடிப்பு, மதுபானங்களை பெண்கள் கொள்வனவு செய்வது தொடர்பிலும் மதுபானசாலைகளில் பெண்கள் கடமைாயற்றுவது தொடர்பிலும் கடந்தவாரம் வர்த்தமானியொன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மதுபான சாலைகளை முற்பகல் 08 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கியும், பெண்களுக்கு மதுபானங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது தொடர்பாகவும் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு நிதி அமைச்சுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதன்படி நாளை முதல் அந்த சுற்று நிருபம் இரத்து செய்யப்படும்” என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பினால் மதுபானம் கொள்வனவு செய்ய எதிர்பார்த்த சில பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.