பதவி துறக்கத் தயார்! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மைத்திரி
12 Jan,2018
தனது ஆட்சிக் காலத்தில் ஜனநாயகம் உச்சத்தில் இருக்கும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சிக்காலத்தை நீட்டிப்பது குறித்த விவகாரத்தில், மீயுயர் நீதிமன்று வழங்கவுள்ள உத்தரவை மனதார ஏற்றுக்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது பதவிக் காலத்தை எப்போது வேண்டுமானாலும் துறக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவியில் ஆறு வருடங்கள் தாம் நீடிக்க முடியுமா என்று மீயுயர் நீதிமன்றத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கேட்டிருந்தார்.
இது குறித்து பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் தலைமையிலான ஐவர் அடங்கிய அமர்வு ஆராய்ந்து வருகிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு தைப்பொங்கலன்று அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.