இலங்கையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு மதுபானம் விற்பதற்கான தடை நீக்கம்..
12 Jan,2018
கொழும்பு: இலங்கையில் பெண்கள் மதுபானங்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் விதிக்கப்பட்டு இருந்த தடையை அரசு திரும்ப பெற்றது. இலங்கையில் கடந்த 1979ம் ஆண்டு முதல் பெண்கள் மதுபானங்கள் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும், மதுபானங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் பெண்கள் பணியாற்றவும் அரசு தடை விதித்திருந்தது. எனினும், பல இடங்களில் பெண்கள் மதுபானங்களை விற்பதிலும், மதுபானங்களை பரிமாறும் சேவையிலும் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.
மேலும், பெண்களுக்கு தடையை மீறி மதுபானங்களும் விற்கப்பட்டன. இந்நிலையில், பெண்களுக்கு மதுபானங்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் விதிக்கப்பட்ட தடையை 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அரசு நேற்று நீக்கியது. இதற்கான உத்தரவில், அமைச்சர் மங்கல சமரவீரா கயெழுத்திட்டு உள்ளதாக நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.