வவுனியாவில் பாழடைந்த வீட்டில் மர்மமான நிலையி்ல் துாக்கில் தொங்கிய யுவதி!!
06 Jan,2018
வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இன்று மதியம் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்ணாட்டி கணேசபுரத்தில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடத்தொகுதியில் இப் பெண் தூக்கில் தொங்கி இருப்பதை அவதானித்த பொது மகனொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் குறித்த பெண் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடனடியாக தகவல் வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்