பிரான்ஸ் உட்பட ஐரோப்பாவில் வாழும் 337 இலங்கையர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
05 Jan,2018
பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் வாழும் 337 இலங்கையர்களை கைது செய்வதற்கு சிறிலங்கா நீதிமன்றம் திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.
2017ஆம் ஆண்டு 9 மாத காலப்பகுதிக்குள் வெளிநாடு சென்ற 337 இலங்கையர்களுக்கு எதிராகவே இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளுக்கு தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் சாட்சியாளர்கள் 337 பேருக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
2000 இலக்கம் 39 என்ற சிவில் மற்றும் வணிக சட்டத்தின் கீழ் சிறிலங்கா நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பிரான்ஸிலுள்ள 14 இலங்கையர்களுக்கும், பிரித்தானியாவில் உள்ள 42 இலங்கையர்களுக்கும், கனடாவில் உள்ள 21 இலங்கையர்களுக்கும், இத்தாலியில் உள்ள 36 இலங்கையர்களுக்கும், அவுஸ்திரேலியாவில் உள்ள 14 இலங்கையர்களுக்கும், எமிர் ராஜ்ஜியத்தில் உள்ள 35 இலங்கையர்களுக்கும், இந்தியாவிலுள்ள 20 இலங்கையர்களுக்கும், சவுதியிலுள்ள 16 இலங்கையர்களுக்கும், குவைத்திலுள்ள 17 இலங்கையர்களுக்கும், கத்தாரில் உள்ள 11 பேருக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
அவர்களுக்கான அழைப்பாணை வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு நீதிமன்றங்களில் இலங்கை சந்தேகநபர் மற்றம் சாட்சியாளர்கள் 73 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன