மட்டக்களப்பில் சிறுமியின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு!
31 Dec,2017
மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புதுக்குடியிருப்புக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து சிறுமியொருத்தியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிறுமியின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு – மட்டக்களப்பில் சம்பவம்!
மேற்படி சிறுமியின் சடலம், சனிக்கிழமை மாலை (30.12.2017) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியை அண்டி வாழும், 12 வயதுடைய, புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் தரம் 7இல் கல்வி கற்கும் மாணவியான சக்திவேல் ருட்ஷகா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மாலை 5.45 மணியளவில் வேலை முடிந்து, வீடு வந்து வீட்டு அறையினுள் பார்த்தபோது, சிறுமி சடலமாகக் காணப்பட்டதாக சிறுமியின் தாய் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.