யாழ். இந்திய துணைத் தூதுவர் நடராஜன் மீள அழைக்கப்பட்டார்!
21 Dec,2017
யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜன் இந்திய வெளியுறவு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணத்திலிருந்து மீள அழைக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாகவே அவருக்கு எதிராக இந்த நடவடிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சு முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவராக கண்டி துணைத் தூதரகத்தின் அதிகாரி ஒருவரை நியமிக்க இந்தியத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவராக ஆறுமுகம் நடராஜன் சுமார் 3 ஆண்டுகளாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.