அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!
15 Dec,2017
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகள் 29 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களுடன் விசேட விமானமொன்று நேற்று இலங்கை வந்தடைந்தது.
இவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குகின்றனர்.
நாடு கடத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்