இலங்கைத் தமிழ் பெண்ணை நாடுகடத்த வேண்டாம் என அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைக்கு எதிரான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது என கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை தமிழ் பெண் ஒருவரை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளைக் குடிவரவுத் துறை மேற்கொண்டதாகவும் அவரது அகதி விண்ணப்பக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இவரது விண்ணப்பம் விரைவுப் பரிசீலனை முறை மூலம் ஆராயப்பட்ட பின்னர் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இப்பெண் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என இவருக்கெதிராக திறந்த பிடியாணை இலங்கையில் வலுவாக உள்ளதாகவும் இவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் பட்சத்தில் கைது செய்யப்படும் ஆபத்தும் பாலியல் வல்லுறவு உட்பட்ட சித்திரவதைகளுக்கு உட்படும் நிலை காணப்படுவதாகவும் ஜெனிவாவை தளமாகக்கொண்ட சித்திரவதைகளுக்கு எதிரான 10 பேர் கொண்ட குழு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள் ளதாக கார்டியன் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.