மட்டக்களப்பு கடலில் சிக்கியது என்ன?
06 Dec,2017
மட்டக்களப்பு கடலில் சிக்கியது என்ன? மட்டக்களப்பு கடலில் கடந்த வாரம் சிக்கியது கடல் பாம்புகள் அல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
கங்கை, நதிகளில் காணப்படும் Anguilla எனப்படும் மீன வகை ஒன்றே சிக்கியுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் டரன் பிரதிப் குமார தெரிவித்துள்ளார்.
சுத்தமான நீரில் உருவாகும் இந்த மீனினம் இனப்பெருக்க செயல்பாடுகளுக்காக ஏரிகளின் ஊடாக கடலுக்கு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு பாரிய தொகை மீன்கள் ஒன்றாக இணைந்து முட்டையிடுகின்றது. பின்னர், 02, 03 அங்குல நீளமாக சிறிய மீன் குட்டிகள் மீண்டும் ஏரி, குளம் மற்றும் நதிகளுக்கு சென்று வளர ஆரம்பித்து விடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனப்பெருக்கத்திற்காக வரும் மீன்கள் இனப்பெருக்கத்தின் பின்னர் நீண்ட தூரம் பயணிக்கும் எனவும் பின்னர் அவற்றிற்கு என்ன நடக்கும் என்பது இன்னமும் ஆய்வு செய்து பார்த்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இந்த விசேட மீனினம் தனது வாழ்க்கை முறையினை மேற்கொள்ள சென்றமையினால் இவ்வளவு பெரிய தொகை சிக்கியுள்ளதே தவிர இதனால் சுனாமி அல்லது காலநிலை மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.