பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை !
28 Nov,2017
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவர் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்தோடு இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ருவன் விஜேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.