இராணுவத்தினா் 556 பேர் கைது
28 Nov,2017
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 556 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுமுறை பெறாமல் சேவையில் இருந்து இடை விலகியிருந்த அவர்களுக்கு மீண்டும் இராணுவத்தில் இணைவதற்காக பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த 22ஆம் திகதி வரையில் பொதுமன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு நீடித்திருந்தது.
இந்த நிலையில், கடந்த 23ஆம் திகதியில் இருந்து நேற்று வரையிலான காலப்பகுதியினுள் 556 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 23 பெண் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.
அத்துடன், பொது மன்னிப்பு காலப்பகுதியில் 11 ஆயிரத்து 232 பேர் சேவையில் இணைந்துள்ளனர்.