பதவி விலகப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால
24 Nov,2017
ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளும் போது அதற்கு எதிராக தன் மீது குற்றம் சுமத்தப்பட்டால் அனைத்து பதவிகளையும் துறந்து மக்களுடன் இணைந்த போராட நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நிக்கவரட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
இன்று பலர் பல்வேறு குற்றம் சுமத்துகின்றனர். பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் போது அதற்கு எதிராக தீர்மானங்களை எடுக்கும் போது அதற்கு எதிராக என் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் அனைத்து பதவிகளையும் துறந்து மக்களுடன் இணைந்த போராட நேரிடும்.
யார் என்ன சொன்னாலும் ஐம்பதாண்டு அரசியல் வாழ்க்கை தூய்மையான நேர்மையான ஊழல் மோசடிகளற்றதாகும்.
இந்த பழுத்த அரசியல் அனுபவத்தின் ஊடாக நான் எப்போதும் பொறுமையுடன் செயற்படுவேன், நான் அரசியல் பயிலுனர் கிடையாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.