யாழில் 456 குடும்பங்கள் இடம்பெயர்வு – 46வீடுகள் முற்றாக சேதம்
12 Nov,2017
யாழில்.கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக 456 குடும்பங்களை சேர்ந்த 1, 724 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்து உள்ளது. மேலும் யாழில்.மழை காரணமாக 2, 727 குடும்பங்களை சேர்ந்த 9 , 894 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் அதில் 456 குடும்பங்களை சேர்ந்த 1, 724 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் 46 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 172 வீடுகள் பகுதிகளவில் பாதிப்படைந்துள்ளன. மேலும் மழை தொடருமாயின் தாழ் நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மேலும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம். என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
அதேவேளை இடம்பெயர்ந்த மக்களில் , பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. மற்றும் தற்போது நிலவிரிப்பு , நுளம்பு வலைகள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன என மேலும் இடர் முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.