எல்.ரி.ரி.ஈ. யினர் சர்வதேச ரீதியில் நிதி சேகரிக்கும் முயற்சியில்
11 Nov,2017
:
எல்.ரி.ரி.ஈ. அமைப்பினர் இன்னும் சர்வதேச ரீதியில் நிதி சேகரிக்கும் வங்குரோத்து முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இந்த வங்குரோத்து முயற்சி தோல்வியடைச் செய்யப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் நேற்று (10) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்