சுற்றுலா சென்ற யாழ்.சிறுவன் பரிதாப பலி
10 Nov,2017
யாழ்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற சிறுவனை பேரூந்து மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலை யாழ் வீதியில் அமைந்துள்ள மாகாதிபுல் வௌ பாலம் அருகிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 9 வயது நிரம்பிய சிறுவனே உயிரிழந்துள்ளாார்.
சிறுவனை மோதிய இ.போ.ச. பேரூந்தானது நிறுத்தாமல் சென்று விட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை - யாழ்ப்பாணம் வீதியில் இவ்வாறான விபத்துக்கள் அதிகமாக ஏற்படுவதாகவும், தனியார் மற்றும் இ.போ.ச. பேரூந்துகளுக்கு நேரக்கட்டுபாடு விதிமுறைகள் சீராக இல்லாத காரணத்தால் இரண்டு பேரூந்துகளும் முந்திச் செல்வதற்காக ஓடுவதால் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து காணப்டுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் பலியான சிறுவனின் உடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.