சவீந்திர சில்வா மிகமோசமான போர்க் குற்றவாளி
10 Nov,2017
இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று ஆணையாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினை மிக மோசமான யுத்த குற்றவாளி என சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டத்தின் தலைமைச் செயற்பாட்டாளரான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளமை குறித்து இலங்கை இராணுவம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கஜபா படைப்பிரிவின் நிகழ்வொன்றிற்கு கோக் நிறுவனம் அனுசரணை வழங்கியமை குறித்து அந்நிறுவனத்துக்கு எழுதியுள்ள கடித்திலேயே யஸ்மின் சூக்கா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கஜபா படைப்பிரிவானது பல வருடங்களாக பாரியமனித உரிமைமீறல்களில் ஈடுபட்டுள்ளது எனவும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்;தின் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களையும் அவர் அவர் தனது கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஒருவருக்கு கோக் நிறுவனம் எவ்வாறு அனுசரணை வழங்கலாம் எனவும் யஸ்மின் சூக்கா கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின போது முக்கிய பங்காற்றியவர்கள் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாத ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது எனவும் யஸ்மின் சூக்கா தனது அமைப்புக்கு நிதி வழங்குபவர்களை திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறான அறிக்கையை விடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது