அவதானம்! பேஸ்புக் காதலியைக் காணச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த அதிர்ச்சி”
05 Nov,2017
பேஸ்புக் ஊடாக அறிமுகமான பெண் ஒருவருடன் இளைஞன் ஒருவக்கு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவரும் காதலை வட்ஸ் அப் மூலம் பேணி வந்துள்ளனர்.
இளைஞனுக்கு பெண்ணின் உண்மையான முகம் தெரியாது. இந்நிலையில் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு குறித்த பெண் இளைஞனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தான் காதலித்த பெண்ணை முதன் முறையாக பார்வையிடும் நோக்கில் ஆவலாக குறித்த இளைஞன் தெற்கு அதிவேக வீதியினூடாக மாத்தறை நகருக்கு சென்றுள்ளார்.
மாத்தறை நகருக்கு சென்ற இளைஞனை முச்சக்கர வண்டி ஒன்றின் பின்னால் வருமாறு குறித்த யுவதி கூறியுள்ளார்.
யுவதி கூறிய இடத்திற்கு சென்ற இளைஞனை, அங்கிருந்த கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக முச்சக்கர வண்டியில் தெவுன்தர துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளது.
அங்குவைத்து இளைஞனிடம் இருந்த ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பிய இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.