இலங்கையும் அணுஆயுத தாக்குதலுக்கு இலக்காகும் ஆபத்து இருப்பதாக, கடந்தவாரம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண, எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
அணுவாயுத நாடான வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், எந்த நேரத்திலும் போர் வெடிக்கக் கூடிய பதற்றமான சூழல் நிலவுகின்ற நிலையில் தான், அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். இலங்கையை அமெரிக்கப் படைகள் ஒரு தற்காலிக தளமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாலேயே இவ்வாறான எச்சரிக்கையை திஸ்ஸ விதாரண விடுக்க நேரிட்டது.
அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் விமானந்தாங்கி தாக்குதல் அணி (சூiஅவைண ஊயசசநைச ளுவசமைந ழுசடிரயீ) கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற போதே, திஸ்ஸ விதாரண இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
கடந்தமாதம் இலங்கையில் நடந்த விமானப்படையின் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற, அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவரும் கூட, இலங்கையும் வடகொரியாவின் அணுவாயுத தாக்குதல் வீச்செல்லைக்குள் தான் இருக்கிறது என்பதை நினைவுபடுத்தியிருந்தார்.
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், அமெரிக்க கடற்படையின் மூன்று விமானந்தாங்கி தாக்குதல் அணிகள் தற்போது, இந்தோ-பசுபிக் கடற்பகுதிக்கு நகர்த்தப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று தான், நிமிட்ஸ் விமானந்தாங்கி தாக்குதல் அணி.
இந்தப் பிரதேசத்தில் அமெரிக்க கடற்படையின் இரண்டு கப்பல்படைப் பிரிவுகள் உள்ளன. ஐந்தாவது (5வா குடநநவ) மற்றும் ஏழாவது (7வா குடநநவ) கப்பல்படைகளே அவை.
5 ஆவது கப்பல்படைப்பிரிவில் மூன்று விமானந்தாங்கி அணிகளும், இணைந்து போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்ட பின்னர், 7ஆவது கப்பல் படைப்பிரிவில் இணைந்து கொண்டது நிமிட்ஸ் விமானந்தாங்கி தாக்குதல் அணி. அதன் பின்னரே, அந்த அணி கொழும்பு வந்தது. இது விமானந்தாங்கி தாக்குதல் அணி 11 (ஊயசசநைச ளுவசமைந ழுசடிரயீ 11) என்றும் அழைக்கப்படுகிறது.
அமெரிக்க கடற்படையில், இப்போது, 9 விமானந்தாங்கி தாக்குதல் அணிகள் (ஊயசசநைச ளுவசமைந ழுசடிரயீ) செயற்பாட்டு நிலையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் நிமிட்ஸ் விமானந்தாங்கி தாக்குதல் அணி.
ஒவ்வொரு விமானந்தாங்கி தாக்குதல் அணிகளுக்கும், ஒரு விமானந்தாங்கி கப்பல் தலைமை தாங்கும், கிட்டத்தட்ட 7500 படையினரைக் கொண்டதாக இது இருக்கும்.
ஓர் அதிவேக வழிகாட்டல் ஏவுகணைப் போர்க்கப்பலும் (உசரளைநச), ஒரு நாசகாரி ஸ்குவாட்ரனும் (னுநளவசடிலநச ளளூரயனசடிn) இடம்பெற்றிருக்கும். இரண்டு தொடக்கம் ஐந்து வரையான நாசகாரிகள் (னுநளவசடிலநச) இதில் இருக்கும். விமானந்தாங்கி கப்பலில், 65 தொடக்கம் 70 வரையான போர் விமானங்கள் இருக்கும்.
சில சந்தர்ப்பங்களில் இந்தத் தாக்குதல் அணியில், நீர்மூழ்கிகள் (ளரbஅயசiநேள) மற்றும் விநியோக கப்பல்களும் (டடிபளைவiஉள யனே ளரயீயீடல ளாiயீ) இடம்பெறுவதுண்டு.
நான்கு நாட்கள் பயணமாக கடந்த 28ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த, நிமிட்ஸ் விமானந்தாங்கி தாக்குதல் அணியில், மொத்தம் ஆறு கப்பல்கள் இடம்பெற்றிருந்தன.
யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் (ருளுளு சூiஅவைண -ஊஏசூ 68) என்ற 330 மீற்றர் நீளம் கொண்ட விமானந்தாங்கி கப்பலே இதற்குத் தலைமை தாங்கியிருந்தது, அமெரிக்க கடற்படையில் உள்ள மிகவும் வயதான விமானந்தாங்கிக் கப்பல் இது. 3200 கடற்படையினர், விமானப்படையினர், 90 விமானங்கள், ஹெலிகொப்டர்களையும் தாங்கியது இந்த விமானந்தாங்கிக் கப்பல்.
இதனுடன், யு.எஸ்.எஸ். பிரின்சிடோன் (ருளுளு ஞசinஉநவடிn (ஊழு 59) என்ற, வழிகாட்டல் ஏவுகணைப் போர்க்கப்பல்(உசரளைநச) ஒன்றும், நாசகாரிக் கப்பல்களான(னுநளவசடிலநச), யு.எஸ்.எஸ். ஷோப் (ருளுளு ளுhடிரயீ (னுனுழு 86),, யுஎஸ்எஸ் பின்க்னி (ருளுளு ஞinஉமநேல (னுனுழு 91), யு.எஸ்.எஸ். கிட் (ருளுளு முனைன (னுனுழு 100), யு.எஸ்.எஸ். ஹவார்ட் (ருளுளு ழடிறயசன (னுனுழு 83)ஆகிய ஐந்து போர்க்கப்பல்களும் கொழும்பு வந்திருந்தன.
இந்தப் போர்க்கப்பல்களில் 5000 க்கும் அதிகமாக அமெரிக்கப் படையினர், அதிநவீன ஏவுகணைகள் மற்றும் நவீன போராயுதங்களுடன் கொழும்பில் தரித்திருந்தனர். அணுசக்தி ஆயுதங்களும் கூட இந்தப் போர்க்கப்பல்களில் இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்க கடற்படையின் இந்தப் போர்க்கப்பல்கள், கொழும்பில் தரித்திருந்த போது, ஒருவேளை, வடகொரியாவுடன் போர் மூண்டிருந்தால், கொழும்பும் கூட ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கலாம்.
இந்தக் கப்பல்களின் வருகையால், இலங்கைக்கு 10 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என்று அமெரிக்க தூதரகம் ஓர் அறிக்கையில் கூறியிருந்தது.
இந்தக் கப்பல்களின் பயணம், இரு நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய உறவுகளின் ஓர் அடையாளமாகவும் அமெரிக்க தூதரக செய்திக்குறிப்பில், சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுடன், அமெரிக்கப் படையினர் இலங்கையில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்து.
எனினும், செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது போல, பெரியளவில் அமெரிக்கப் படையினர் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே சில நிகழ்வுகளில் பங்கேற்றனர். அதுவும் வரையறுக்கப்பட்டளவினரே பங்கேற்றிருந்தனர்.
இதற்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும், அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் தாக்குதல் அணி, கொழும்புக்கு மேற்கொண்ட பயணம் நீண்ட திட்டமிடல்களுடன் கூடிய ஒன்று அல்ல.
சில வெளிநாட்டு ஊடகங்கள் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் ஒரு நகர்வாக இதனை வர்ணித்திருந்தன. இன்னும் சில ஊடகங்கள், வடகொரிய பதற்றத்துடன் தொடர்புபடுத்தியிருந்தன.
எவ்வாறாயினும், அமெரிக்கா தனது விமானந்தாங்கி ஒன்றை 32 ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கைக்கு அனுப்பியதும், அதனுடன், கூட 5 பாரிய நாசகாரி கப்பல்களை அனுப்பியதும் சாதாரணமான விடயமாக கருதக் கூடிய ஒன்றல்ல.
இலங்கையில் அமெரிக்கா தளம் அமைக்கப் போகிறது என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த, ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில்- 1985ஆம் ஆண்டு யுஎஸ்எஸ். கிற்றி ஹோக் (ருளுளு முவைவல ழயறம) என்ற விமானந்தாங்கிக் கப்பல், திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்திருந்தது.
அதற்குப் பின்னர், அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்திருப்பது இதுவே முதல்முறை.
2015 ஜனவரி ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், அமெரிக்க போர்க்கப்பல்கள் அடுத்தடுத்து இலங்கைக்கு வரத் தொடங்கிய போதே, விமானந்தாங்கி கப்பல்களின் வருகையும் விரைவில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் யு.எஸ்.எஸ். நிமிட்ஸின் வருகை அமைந்திருந்த போதிலும், அதற்கும் அப்பால் நிமிட்ஸ் தாக்குதல் அணியின், ஆறு போர்க்கப்பல்கள் ஒரே நேரத்தில் கொழும்பில் நங்கூரமிடும் என்று எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
அமெரிக்கப் போர்க்கப்பல்களை கொழும்புத் துறைமுகத்தில் இறங்குதுறையில் தரித்து நிறுத்துவதற்கு இடம் இல்லாதளவுக்கு, இவற்றின் வருகை அமைந்திருந்தது.
இதற்கு முன்னர், வேறெந்த நாட்டினதும், ஆறு போர்க்கப்பல்கள் ஒரே நேரத்தில் கொழும்பு வந்ததாகத் தெரியவில்லை.
அமெரிக்கா- இலங்கை இடையிலான, பாதுகாப்பு ஒத்துழைப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தக் கப்பல்களின் வருகை அமைந்திருந்தது.
திடீரென, கொழும்பை நோக்கி அமெரிக்கா தனது விமானந் தாங்கி தாக்குதல் அணி ஒன்றையே திருப்பி விட்டதன் உண்மையான நோக்கம் இன்னமும் தெளிவாகவில்லை.
ஏனென்றால், முழுமையாக இது ஒரு நல்லெண்ணப் பயணமாக இருந்திருந்தால், கூடுதல் சமூக நிகழ்வுகள், கூட்டுப் பயிற்சிகள், ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும்.
அவ்வாறு நடைபெறாதது, திடீர் முடிவு ஒன்றின் படியே இது நடந்திருப்பதற்கான சாத்தியங்களை ஊகிக்கத் தூண்டுகிறது.
2013இல் சீன நீர்மூழ்கி கொழும்பில் தரித்துச் சென்றமை இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் மத்தியில் கடும், விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
மீண்டும் கடந்த மே மாதம் கொழும்பு வருவதற்கு சீன நீர்மூழ்கிக்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால் பிராந்தியப் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறி அதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.
ஆனால், வடகொரியாவுடன் பதற்றம் உச்ச நிலையில் உள்ள சூழலில், வடகொரிய ஏவுகணை வீச்செல்லைக்குள் இலங்கையும் இருக்கும் நிலையில், அமெரிக்காவின் ஒரு விமானந்தாங்கி தாக்குதல் அணியே கொழும்பில் தரித்திருந்து விட்டுச் சென்றிருக்கிறது. அதற்கு அரசாங்கம் மறுப்பின்றி அனுமதியும் கொடுத்திருக்கிறது.
இலங்கையும், இலங்கைக் கடற்படையும் இப்போது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியிருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது.
அதற்கு மற்றொரு உதாரணமாக கூறக் கூடிய சம்பவமும் கடந்த வாரம் நிகழ்ந்திருக்கிறது.
இலங்கைக் கடற்படைத் தளபதியாக கடந்த மாத இறுதியில் நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பதற்கு முன்னரே, இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படை அதிகாரிகள் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்ததே அதுவாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாரில் இருந்தபோதே, புதிய கடற்படைத் தளபதிக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளரே அதனை வழங்கினார். இது மரபுக்கு மாறான ஒன்று.
ஜனாதிபதி நாட்டில் இல்லாதபோதே புதிய கடற்படைத் தளபதி பதவியேற்றார். ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர், நேரம் போதாமையால் புதிய கடற்படைத் தளபதியைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை.
அதற்குள்ளாக, கடந்த மாதம் 30ஆம் திகதி, இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகரும், சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகரும், அமெரிக்காவின் நிமிட்ஸ் தாக்குதல் அணியின் தளபதியும் புதிய கடற்படைத் தளபதியை, சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.
அதற்கு மறுநாளான, 31ஆம் திகதியே ஜனாதிபதியை முதல்முறையாக கடற்படைத் தளபதி சந்தித்தார்.
இது, தற்செயலான நிகழ்வு மாத்திரமல்ல, இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்கா, இநதியா, சீனா போன்ற நாடுகள் எந்தளவுக்கு ஆர்வத்துடன் இருக்கின்றன என்பதையும் கூட வெளிப்படுத்தியிருக்கிறது.