இலங்கையில் நானே அதிகளவில் அவமானப் படுத்தப்படுகின்றேன் – ஜனாதிபதி
04 Nov,2017
”மலரும் பொலன்னறுவை” திட்டத்தின் கீழ் பகமுண – மஹசென் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
168 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில், இரண்டு தொழில்நுட்ப பிரிவுகளும், 8 வகுப்பறைகளும் காணப்படுகின்றன.
இதன்போது பாடசாலை வளாகத்தில் மரக்கன்றொன்றை ஜனாதிபதி நாட்டியதுடன், அழகியற்கலை பாடத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வின் பின்னர் ஹெலஹார பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாகக் கட்டடத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
இதற்காக 600 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி தெரிவித்த கருத்து
இலங்கையில் நானே அதிகளவில் அவமானப்படுத்தப்படுகின்றேன். இதன் ஊடாக ஜனநாயக சமூகமொன்றின் சுதந்திரத்தை காண முடிகின்றது. இணையத்தளங்கள், பேஸ்புக் ஆகியவற்றின் ஊடாக என்னை நிந்திப்பதை உங்களால் காண முடியும். உலகில் முன்னேற்றமடைந்த நாடுகளில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாது. இவை முன்னேற்றமடையாத மக்களின் இயல்பாகும். எவ்வகையான அவமானங்கள் வந்த போதிலும், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் எமக்குள்ள பொறுப்புக்களையும் கடமைகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும்.