கனடாவில் குடியேற இலங்கையர்களுக்கு அடித்த அதிஸ்டம்.
04 Nov,2017
அடுத்து வரும் மூன்று வருடங்களில் 10 இலட்சம் வெளிநாட்டவர்கள் கனடாவில் குடியேற அனுமதிக்கப்பட உள்ளனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என உலக நாடுகள் வெளிநாட்டில் இருந்து குடிபெயர்பவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் கனடாவின் இந்த முடிவு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பை கனடாவின் குடியேற்றத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, 2018ஆம் ஆண்டு 310,000 வெளிநாட்டவர்களுக்கும், 2019ஆம் ஆண்டில் 330,000 வெளிநாட்டவர்களுக்கும், 2020ஆம் ஆண்டு 340,000 வெளிநாட்டவர்களுக்கும் கனடாவில் குடிபெயர அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் அகமது ஹுசேன் தெரிவித்துள்ளார்.
இது கனடா வரலாற்றில் என்று மட்டும் இல்லாமல் உலக நாடுகளின் வரலாற்றிலேயே முக்கியமான அறிவிப்பாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிட்ட தரவின் படி வெளிநாடுகளில் இருந்து கனடா வந்து பிள்ளைகளைப் பெற்றவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது என்றும், கனடியர்களின் பிறப்பு விகிதம் சரிந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.
கனடாவுக்கு குடிபெயர்வதில் முதல் இடத்தில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். இரண்டாம் இடத்தில் ஆபிரிக்கா நாடுகள் உள்ளன. இந்தத் தரவு 2011 முதல் 2016 வரையில் நடைபெற்ற குடிபெயர்வுகளை பொறுத்தது கூறப்படுகின்றது.
அடுத்து இந்த இடத்தில் ஆசிய நாடுகள் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளதைப் போன்ற கடுமையான விதிகள் கனடாவில் இல்லை எனவும், எளிதாக கனடாவில் குடிபெயரலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது