இந்தியாவின் மூன்று பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்.
02 Nov,2017
இந்தியாவின் மூன்று பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்த கப்பல்கள் நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை அறிவித்துள்ளது.
கொழும்பு வந்த இந்திய பாதுகாப்பு கப்பல்கள்
இந்தியக் கடற்படைக் கப்பல்களான திர் மற்றும் சுஜாதா என்பனவும், இந்திய கடலோர பாதுகாப்பு கப்பலான சாரதியும் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
குறித்த கப்பல்கள் ஸ்ரீலங்கா கடற்படையின் மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டுள்ளன.
கொழும்பு வந்த இந்திய பாதுகாப்பு கப்பல்கள்
நல்லெண்ண மற்றும் பயிற்சிகள் நோக்கில் இந்த கப்பல்கள் ஐந்து நாட்கள் கொழும்பு துறைமுகத்தில் தரித்த நிற்கும் என குறிப்பிடப்படுகிறது.
குறித்த கப்பலில் வந்த கடற்படை வீரர்கள் விளையாட்டு போட்டிகள், சமுக சேவைகள் ஆகியவற்றிலும் ஈடுபடவுள்ளனர்.