கிளிநொச்சியில் கடும் மழை – குளங்களின் நீர்மட்டம் உயர்வு!
02 Nov,2017
கிளிநொச்சி மாவட்டத்திலும் வடக்கின் பல பகுதிகளிலும் கடந்த சில நாள்களாகக் கடும் மழை பொழிந்து வருகின்றது. இன்று பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
கிளிநொச்சியில் கடந்த 3 நாள்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது. குளங்களின் நீர்மட்டங்கள் உயர்ந்துள்ளன.
இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 7 அடியில் இருந்து 13 அடியாக உயர்ந்துள்ளது.