கருணா விடுதலை.!
30 Oct,2017
வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் சற்று முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போதே, விநாயகமூர்த்தி முரளிதரனை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட 9 கோடி ரூபாய் பெறுமதியான அதிசொகுசு வாகனமொன்றை மீளகையளிக்காமல் தொடர்ந்து பயன்படுத்திவந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.