ரயிலில் மோதிய வாகனம் – 2 பெண்கள் பலி – 13 பேர் காயம்
29 Oct,2017
ரயில் என்ஜினுடன் வான் ஒன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தம் மீட்டியாகொட, தலவத்துமுல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த ரயில் என்ஜின் காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளது.
வானில் பயணித்த பிக்கு ஒருவரும் 12 பெண்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்டியாகொட மற்றும் தெல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் 37 மற்றும் 49 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எவ்வித காயமும் ஏற்படாத நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது