இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பேய் படம்! இதனால் சிறுவர்கள் அச்சங்கொண்டு
28 Oct,2017
சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவர்களுக்கு பயமூட்டும் பேய் திரைப்படம் காண்பித்துள்ளதனால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் நகரிலுள்ள சர்வதேச பாடசாலையிலே இந்த பேய் திரைப்படம் காணபிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறுவர்கள் அச்சங்கொண்டு பாடசாலைக்குச் செல்வதற்கும் மறுப்புத் தெரிவித்து வருவதாகவும் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் கடந்த 23 ஆம் திகதி பகல் வேளையில் பயங்கரமான பேய் திரைப்படம் ஒன்று மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
குருநாகல் நகரில் பழைமை வாய்ந்த கட்டடத்தில் நடத்தப்படும் இந்தச் சர்வதேசப் பாடசாலையின் யன்னல்கள் மற்றும் கதவுகளை பூட்டிவிட்டு குறித்த திரைப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது.
வயது வந்தவர்களையும் அச்சமூட்டும் காட்சிகள் கொண்ட இந்தப் திரைப்படத்தைப் பார்த்த மாணவர்கள், அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறவும் பயப்படுவதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பின்னர் மன ரீதியில் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சர்வதேச நாடுகளில் வருடாந்தம் நடத்தப்படும் பேய் தினக் களியாட்டம் (ghost day carnival) இலங்கைக்கும் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமையவே இவ்வாறு பயங்கரமான பேய் திரைப்படம் பாடசாலை மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.