தமிழ் அரசியற் கைதி ஒருவர் சற்றுமுன்னர் விடுதலை; கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி!
26 Oct,2017
பதினெட்டு வருடங்களின்பின்னர் தமிழ் அரசியற்கைதி ஒருவர் சற்று முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கனகரத்னம் ஜீவரட்ணம் எனும் குறித்த அரசியற் கைதியே குற்றவாளி இல்லை என நீதிபதியினால் குறிப்பிடப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவரது வழக்கு ஆரம்பத்தில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
பதினெட்டு ஆண்டுகளாக எந்தவித விசாரணைகளுமின்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சிரேஸ்ட சட்டத்தரணி K. S ரட்ணவேல் இவருக்காக வாதாடியிருந்தார்.
குறித்த வழக்கை விசாரணை செய்துவந்த கொழும்பு மேல் நீதிமன்றம், குறித்த நபர் குற்றவாளி இல்லை என தீர்ப்பளித்து சற்றுமுன்னர் விடுதலை செய்தது.