யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரியாலை - மணியம்தோட் டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதோர் முன்னெ
டுத்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், துப்பாக்கிதாரிகளின் இலக்கு சிவில் உடை யில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் களை இலக்கு வைத்ததில், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் சிக்கியிருக்கலாம் எனவும் விசாரணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அது தொடர்பில் சிறப்பு அவதானம் செலுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதே வேளை, இந்த துப்பாக்கிச் சூடானது பாதுகபபுத் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டதாக பரவலாக கருத்துக்கள் உலாவும் நிலையில் அது தொடர்பிலும் தனியாக விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் உத்தரவுக்கு அமைய, யாழ். பொலிஸ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ணான்டோவின் நேரடி கட்டுப்பாட்டில் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் விஜித்த குணரத்னவின் ஆலோசனையின் கீழ் செயற்படும் வண்னம் யாழ். தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூன்று பொலிஸ் குழுக்களும் இந்த இரு விடயங்கள் தொடர்பிலும் விஷேட அவதானம் செலுத்தியுள்ளன. இதனைவிட பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் வெ ளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு , அரியாலை பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்த அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்துள்ளது.
அங்கு கடமையில் இருந்த பொலிஸாருக்கு சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் சென்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் மற்றொருவரும் அன்றைய தினம் பகல் உணவு எடுத்து சென்றுள்ளனர். துப்பாக்கிதாரிகளின் இலக்கு அந்த பொலிஸ் உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டும் என்றே சந்தேகமாக உள்ளது. பொலிஸார் என நினைத்து குறித்த இளைஞன் இலக்கு வைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
எனினும் துப்பாக்கிதாரியை அடையாளம் கண்டு கைது செய்யும் வரை எதையும் உறுதியாக கூற முடியாது. அதுவரை இவ்வாறாக சந்தேகிக்கப்படும் அனைத்து கோணங்களிலும் விசாரணைகள் நடாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது