புதிய கடற்படை தளபதி நியமனம் – ட்ரவிஸ் சின்னையாவுக்கு ஓய்வு
25 Oct,2017
புதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.கடந்த ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா ஓய்வு பெறுவதன் காரணமாக புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, மிகவும் குறுகிய காலத்திற்கு நாட்டின் கடற் படைத் தளபதியாக பதவி வகித்தவர் என ட்ரவிஸ் சின்னையா இடம்பிடிக்கிறார்.
இதேவேளை, ட்ரவிஸ் சின்னையா 50 வருடங்களின் பின்னர் இலங்கையின் பாதுகாப்பு படை தளபதியாக நியமிக்கப்பட்ட தமிழ் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.