அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி சிறிலங்கா உச்சநீதிமன்றம் முன் கவனயீர்ப்புப் போராட்டம்
23 Oct,2017
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரி சிறிலங்கா உச்சநீதிமன்றத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தினால் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அனுராதபுர சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றுமாறும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறும் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில், கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, கலாநிதி நல்லையா குமரகுருபரன், பாஸ்கரா, மதகுருமார் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொதுமக்கள், சட்டவாளர்களும் பங்கேற்றனர்