: நோர்வே தூதுவர்
இலங்கையின் மீன்பிடித்துறையை நிலையானதாக மாற்றுவதற்கான உதவிகளை நோர்வே தொடர்ந்தும் மேற்கொள்ளும் என்று இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியோன் கவுஸச்சேத்த தெரிவித்தார்.
வலி.வடக்கு, பலாலி கிழக்கில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கட்டடத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மீளக்குடியேறிய பகுதிகளில் வாழ்வாதார உட்கட்டுமான மற்றும் பிற துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நான் கடந்த முறை தெல்லிப்பழைக்கு வந்தபோது பார்த்ததைவிட நிறைய மாற்றங்களைக் காண்கின்றேன். சுமுகமாக நீங்கள் ஒன்றுபட்டுள்ளீர்கள். உங்களுக்குள் ஒருங்கிணைந்து முன்னேறுகிறீர்கள். இவை பயனுள்ள வழிகளாகும்.
மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு மீளக்குடியேறுவது முக்கியமானது. இதனாலேயே காணிகள் விடுவிக்கப்பட்ட நாள் முதல் நோர்வே அரசாங்கம் மீள்குடியேறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகளையும், வசதிப்படுத்தும் உதவிகளையும் செய்து வருகின்றது. இதுவரை தெல்லிப்பழை, கோப்பாய், திருகோணமலை, சம் பூர் ஆகிய பகுதிகளில் மீளக்குடியேறிய சுமார் ஆயிரத்து 400 குடும்பங்களுக்கான உதவிகளை நாம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் துணையோடு வழங்கியுள்ளோம்.
2015ஆம் ஆண்டு காணிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியேறத் தொடங்கியது முதல் நோர்வே அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை உதவியாக வழங்கியுள்ளது.
தெல்லிப்பழையில் நோர்வேயின் உதவி யானது பாதிக்கப்பட்ட பெண்களை நோக்காகக் கொண்டு வழங்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி உதவித் திட்டமானது மாவட்ட மற்றும் பிரதேச அரசாங்க அலுவலர்களுடன் முன்னெடுக்கக் கூடியதாக அமைய வேண்டும்.
காணிகள் விடுவிக்கப்பட்டவுடன் முத லில் மீளக்குடியேறியவர்கள் நீங்கள் என்பதை நானறிவேன். நீங்கள் உங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பது மீள் இணக்கத்தின் முக்கியமான அடையாளமாகும். போருக்குப் பின்னரான சூழலில் வாழ்வாதாரத்தையும் சமாதானத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவது அபிவிருத்திக்கு அடிப்படையானதாகும். போருக்குப் பின்னரான நிலைமைகளில் இயற்கையான வளங்களை மையப்படுத்தி வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவது உணவுப் பாதுகாப்பு, தொழில் வாண்மை போன்றவற்றுக்கு முக்கியமானதாகும்.
நோர்வேயானது இலங்கையில் நீண்டகாலமாக அபிவிருத்தி உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. சீநோர் உதவித்திட்டத்தின் கீழ் வடபகுதி மீன்பிடித்துறைக்கு அளித்த உதவி உங்களில் சிலருக்கு நினைவிருக்கக்கூடும். சில தசாப்பதங்களுக்கு முன்னர் சீநோர் உதவித் திட்டத்தின் கீழ் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில் காரைநகர் மற்றும் குருநகரில் வள்ளங்கள் மற்றும் மீன்பிடிவலைகள் செய்வதற்கான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.
இப்போது இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நோர்வே இலங்கை யில் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினைத்திறனுள்ளதாக மாற்றுவதற்குமான உதவிகளைச் செய்து வருகிறது. தேசிய மீன்பிடிக்கொள்கையை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் இலங்கையில் மீன்வளங்களைக் கணக்கெடுப்பதற்கான உதவிகளையும் நோர்வே செய்து வருகிறது. இவை இலங்கையின் மீன்பிடித்துறையை நின்று நிலைக்கக்கூடியதாக மாற்றும் நோக்கில் செய்யப்படும் உதவிகளாகும்.
இன்று இந்த பலநோக்குக் கூட்டுறவுக் கட்டடத்தை திறந்து வைத்து அதை மக்களி டம் கையளிப்பதில் மகிழ்வடைகின்றேன். இது உங்களுக்கு பயனுள்ளதாக அமை யும் என எதிர்பார்ப்பதோடு இதன் துணை யுடனும் உங்கள் கடின உழைப்புடனும் வளமான சமூகத்தை உருவாக்குவீர்கள் என்று நம்புகின்றேன். இவ்விடயத்தில் இதைச் சாத்தியமாக்கியதோடு பயனுள்ள பணிகளை முன்னெடுக்கும் ஐக்கிய நாடு கள் அபிவிருத்தி உதவித் திட்டத்திற்கும் அதன் பணியாளர்களுக்கும் எனது நன்றி யைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.