ஜே.ஆரின் பேரன் அரசியலில் குதிக்கிறார்
19 Oct,2017
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பேரன், பிரதீப் ஜெயவர்த்தன அரசியலில் குதிக்கவுள்ளார் என்று கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று அவர் கொழும்பில் நடத்தவுள்ள செய்தியாளர் சந்திப்பில் அரசியலில் நுழையும் தமது முடிவை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவின் தற்போதைய அரசியலமைப்பையும், சிறிலங்காவில் நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையையும் அறிமுகப்படுத்திய ஜே.ஆர்.ஜெயவர்த்தன, 1978ஆம் ஆண்டு தொடக்கம், 1989ஆம் ஆண்டு வரை அதிபராக பதவியில் இருந்தவர்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனான ரவி ஜெயவர்த்தனவின் மகனே பிரதீப் ஜெயவர்த்தன ஆவார்.