வடக்குக் கிழக்கு இணைப்பை ஒரு சாரார் விரும்பாவிட்டால் பலாத்காரமாக அதனை ஒருபோதும் செய்ய அனுமதிக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வெறுமனே சுயநலத்துக்காகவோ, சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகவோ சந்தர்ப்பவாதத்துக்காகவோ மேற்கொள்ளும் அரசியல், சமூகத்திற்கு ஏற்புடையதல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது
சிரேஷ்ட உரை பெயர்ப்பாளரும், சமூகவியல் ஆய்வாளருமான எம் எம் ராஸிக் எழுதிய “ஹெம்மாத்தகமை முஸ்லிம்களின் வரலாறு” என்ற நூலின் வெளியீட்டு விழா மருதானை மாளிகாகந்தை அஷ் ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில், இரவோடிரவாக எவருக்கும் தெரியாமல் வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது
அப்போது மர்ஹூம் எம் எச் எம் அஷ்ரப், தவறு நிகழ்ந்து விட்டது என்றார். எனினும் அவர் அந்தப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் அபிலாஷைகள் தொடர்பில் சில முடிவுகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்.
முஸ்லிம் சமூகம் ஆயுதம் ஏந்தாத ஒரு சமூகம். தென்னிலங்கையில் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்து வருகின்ற போதும் அந்தச் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போது அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
அதே போன்று வடக்கிலே ஒரே மொழி பேசும் தமிழ்ச் சமூகத்திலுள்ள இளைஞர்கள் ஆயுதம் தூக்கிய போது நாம் உடந்தையாக இருக்கவில்லை.
வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது
இறைமையையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் பேணிக்காத்த ஒரே காரணத்துக்காக வடக்கிலே முஸ்லிம்களில் ஒரு இலட்சம் பேர் விரட்டப்பட்டனர்.
அதே போன்று சிங்கள சமூகத்தைச் சார்ந்த இனவாதிகள் எம்மைப் பற்றிய பிழையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து எமது சமூகத்தை தினமும் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்த முஸ்லிம் சமூகம் தினமும் கொச்சைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.