சிறைக்குள் நாமல்! மானம் காத்த கைதி!! அப்பாவி தமிழ் இளைஞர்களை ங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
17 Oct,2017
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற நாமல் ராஜபக்ஷ தொடர்பில் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற எதிர்ப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் உள்ளிட்ட குழுவினர் நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
namalஇதன்போது நாமலுக்கு மாற்று ஆடைகள் இல்லாத காரணத்தால் சிறையில் இருந்த கைதி ஒருவர் சாரம் கொடுத்து உதவியதாக குறித்து ஊடகம் தெரிவித்துள்ளது.
நாமல் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த விடயம் வெளியாகி உள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“நான் விளக்கமறியலில் 2901 என்ற இலக்கத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டேன். நீதிமன்றத்தினால் விளக்கமறியல் படுத்துமாறு உத்தரவிட்டதன் பின்னர் எங்களை இரவு 12 மணியளவில் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர்.
இரவு 12 மணிக்கு விளக்கமறியல் வைக்கப்பட்ட எங்களுக்கு அணிவதற்கு மாற்று ஆடை இருக்கவில்லை. பின்னர் ஜுலம்பிட்டியே அமரே என அழைக்கப்படும் கைதியிடம் இருந்து எனக்கு சாரம் ஒன்று கிடைத்தது.
நந்தவத்தே பாலயா என அழைக்கப்படும் சிறை கைதி தடுத்து வைக்கப்பட்டிருந்த அறைக்குள் எங்களை அனுப்பினார்கள்.
அதிக மழை காரணமாக சிறைச்சாலைக்குள் நீர் ஒழுகியது. தொடர்ந்து மழை பெய்தமையினால் சிறைச்சாலையில் உள்ளவர்களுக்கு 3 நாட்கள் உறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
மழை இல்லாத நேரங்களில் நுளம்பின் தொல்லையை அனுபவிக்க நேரிட்டது. குறைந்தபட்சம் நாள் ஒன்று 500 – 1000 உண்ணிகள் சிறையில் இருந்து வெளியேற்றப்படும்.
சிறைகைதிகளும் மனிதர்கள் அங்கு குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் தங்காலை சிறையில் அவ்வாறு இல்லை.” என நாமல் வழங்கிய தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல் அப்பாவி தமிழ் இளைஞர்கள், விசாரணை கூட நடத்தப்படாத நிலையில் பல வருடங்களாக சிறைச்சாலைக்குள் முடங்கியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.