போதைப்பொருளற்ற நாடாக இலங்கை மேற்கொண்டுவரும்
17 Oct,2017
போதைப்பொருளற்ற நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிமேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவி புரியும் வகையில் கடல் மார்க்கமானபோதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை இலங்கைகடற்படை மேற்கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளை ஒழிக்கும் தேசிய பணியகத்துடன் இணைந்து இதற்கானநடவடிக்கைகளை கடற்படையானது மேற்கொண்டுவருவதாக கடற்படையின்அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டத்தை மீறியவகையில்போதைப்பெருட்களைத் தம்வசம் வைத்திருந்த மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களைஉடனடியாக கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் கடற்படையினர்மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக கடந்த காலங்களில் 29.9 கிலோ ஹெரோயின் ஆயிரத்து 466.5 கிலோகேரள கஞ்சா 3 ஆயிரத்து 219.7 கிலோகிராம் கெபின் போதைப்பொருள்கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 3 கிலோ ஹஷிஸ் 118பக்கெட் மதன மோதகம் 33 ஆயிரத்து 286 வலிநிவாரண மாத்திரைகள் 8 ஆயிரத்து 660சட்டவிரோத சிகரெட்ஸ் 128 கிலேகிராம் புகையிலை உற்பத்தி பொருட்கள் மற்றும் 182லீட்டர் மதுபானம் போன்றனவும் மீட்கப்பட்டுள்ளன.
இக்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 193 பேர் கைதுசெய்யப்பட்டு சட்டநடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.